தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை என்பது அண்ணாச்சி முத்துக்குமார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
1984இல். இருந்து. தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை என்று பதிவானது 2001.
கடந்த 45 ஆண்டுகளாக வணிகர்கள் நலன் காக்க, அவர்களுடைய பிரச்சனைக்கு குரல் கொடுக்க, அவர்களுடைய தொழிலுக்கு பாதுகாப்பு கிடைத்திட, சமூக விரோதிகளின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்திட உருவாக்கப்பட்டது தான் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை.
சிதறி கிடந்த வணிகர்களை எல்லாம் ஒரு அமைப்பில் கொண்டு வர வேண்டும் என்று 1984 இலிருந்து ஊர் ஊராக சென்று வணிக சமுதாயத்தை ஓர் அணியில் கொண்டு வந்த பெருமை தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையை சேரும்.
சுதேசி வணிகர்களின் வரலாற்றில் ஒரு உன்னத இடத்தில் இருப்பது திகழ்பவர் முத்துக்குமார் அண்ணாச்சி அவர்கள்.
என்றும் ,எங்கும் பாதிக்கப்படுகின்ற வணிகர்களுக்கு குரல் கொடுப்பதில் என்றுமே தயங்காத அமைப்பு.
அரசியல் சார்பு இல்லாமல், மத சார்பு இல்லாமல் ,ஜாதி உணர்வு இல்லாமல் தொழில் செய்யக்கூடிய அனைவரும் சகோதரர்கள்.
சுயதொழில் செய்யக்கூடிய அனைத்து சுதேசிகளும் உறவுகள் ...என்ற அடிப்படையிலே செயல்பட்டுக் கொண்டிருப்பது தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை.
இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் உறுதுணையாக இருப்பதற்கு தான் ஒரு அமைப்பு வேண்டும்.
அந்த கோட்பாட்டில் அமைக்கப்பட்டது தான் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை ..
யார் தவறு செய்தாலும் சுட்டிக்காட்டக்கூடிய கடமை தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவைக்கு உண்டு.
வரி கொடுக்கும் வணிகன் வரலாற்றில் இடம்பெற வேண்டும்.
வரி கொடுக்கும் வணிகன் பொருளாதாரத் திட்டம் வகுத்துக் கொடுக்க வேண்டும் என்கின்ற தத்துவத்தில் செயல்பட்டு வருவது தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை .
எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு காரணத்தினால் பாதிக்கப்பட்டாலும் அவன் யார் என்ன என்று ஆராயாமல் அவனும் சுதேசி வணிகன்.
நமது இனம் ......என்ற அடிப்படையில் உதவி செய்வது தான் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை.
தமிழ்நாட்டில் தென் மூலையில் நெல்லை மாவட்டம்.
(தற்போது தூத்துக்குடி மாவட்டம்.)
சிறிய கிராமம் குருகால் பேரி.
சாத்தான்குளம் தொகுதிக்கு உட்பட்டது.
அங்கிருந்து 12 வயதில் பிழைப்பு தேடி சென்னை வந்தார்.
நாளெல்லாம் உழைத்து, உழைத்து தொழில் அதிபராக உயர்வு கண்டவர்.
அதிகார வர்க்கத்தினால் வணிகர்கள் பாவிக்கப்படுவதை நேரடியாக உணர்ந்து இவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும்! என்று சங்கம் என்ற களம் அமைத்தவர்.
தனது... உடல், பொருள், ஆவி ,அனைத்தும் இந்த இன பாதுகாப்பிற்காக செலவு செய்த தன்னிகரில்லாத தலைவராக திகழ்பவர் அண்ணாச்சி அ.முத்துகுமார்.
தமிழ்நாட்டில் தென் மூலையில் நெல்லை மாவட்டம்.(தற்போது தூத்துக்குடி மாவட்டம்.) சிறிய கிராமம் குருகால் பேரி. சாத்தான்குளம் தொகுதிக்கு உட்பட்டது. அங்கிருந்து 12 வயதில் பிழைப்பு தேடி சென்னை வந்தார். நாளெல்லாம் உழைத்து, உழைத்து தொழில் அதிபராக உயர்வு கண்டவர். அதிகார வர்க்கத்தினால் வணிகர்கள் பாவிக்கப்படுவதை நேரடியாக உணர்ந்து இவர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும்! என்று சங்கம் என்ற களம் அமைத்தவர். தனது... உடல், பொருள், ஆவி ,அனைத்தும் இந்த இன பாதுகாப்பிற்காக செலவு செய்த தன்னிகரில்லாத தலைவராக திகழ்பவர் அண்ணாச்சி அ.முத்துகுமார்.
தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையில் கடந்த 20 ஆண்டுகளாக பயணிக்கின்றார். மாவட்ட பொறுப்பு ,மாநில துணை பொறுப்பு, மாநில பொதுச் செயலாளர் என்ற வகையில் பதவி உயர்வு பெற்று திறமையாக செயல்பட்டு வரக்கூடியவர் பொதுநலத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவர். பண்பு கொண்டவர். சமுதாயத்தின் மீது மிகவும் பற்று கொண்டவர் உயர்ந்த எண்ணம் கொண்டவர். சுதேசி தொழில் செய்பவர்களுக்கு முடிந்த அளவிற்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருபவர். சுதேசி பொருளாதாரத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவர். எந்த இடர்பாடும் இன்றி தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையில் பயணிக்கின்றார். எந்தவித ஈகோ பிரச்சனையும் இல்லாமல் பொதுநலன் எண்ணத்தோடு பயணிக்க கூடியவர். ஒவ்வொரு பகுதிக்காக சென்று தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் கொள்கையை எடுத்துச் சொல்லக்கூடிய வல்லுனர்.
பொதுச் செயலாளர்
பொருளாளர்
சுயதொழில் செய்து வருபவர். சிறுவயது முதல் சங்கங்கள் மீதும், மற்றும் அரசியல் கட்சிகள் மீதும் ஆர்வம் கொண்டவர். கிளைச் சங்கத்தில் பொறுப்பு, மாவட்ட அளவில் பொறுப்பு, மாநில அளவில் பொறுப்பு என்று பதவி உயர்வு பெற்றவர். அமைதியானவர். மிகவும் அன்பானவர். அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடிய பண்பானவர். தலைவர் கருத்துக்கு மறு கருத்து இல்லாதவர். தலைவர் எவ்வழியோ அவ்வழியே தானும் என்ற கொள்கையில் விடாப்பிடியாக செயல்படுபவர். பொருளாதார சிக்கல் வருகின்ற பொழுதெல்லாம் உதவி செய்யக் கூடியவர். எவரிடமும் மனம் கோணாமல் பேசக்கூடியவர். எந்தவித ஈகோவும் இல்லாதவர்.ிய வல்லுனர்.
தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையில் 2018 இல் பேரவையில் தலைமை ஒருங்கிணைப்பாளராக இணைந்து தமிழ்நாடு முழுக்க பல்லாயிரம் கிளைகளை அமைத்து மற்றும் இணைப்பு சங்கங்களை இணைத்து வணிகர்களுக்காக ஏற்படும் பாதிப்புகளை பிரச்சனைகள் கண்டறிந்து பல ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் கையில் எடுத்து கைதாகி வெற்றி பெற்றுள்ளார். பல போராட்டங்களை ஒன்றிணைத்து வெற்றி கண்டுள்ளார் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறார்னர்.
தலைமை ஒருங்கிணைப்பாளர்
மாநில இளைஞரணி தலைவர்
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில இளைஞரணி தலைவராக இருக்கிறார் இவர் காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளர் ஆக இணைந்து சுமார் 13 ஆண்டுகளாக பல்லாயிர இளைஞர் உடன் இணைந்து செயலாற்றி வருகிறார்னர்.